328 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! தென் ஆப்பிரிக்காவிடம் சரணடைந்த ஜிம்பாப்பே
புலவாயோ டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்பேவை வீழ்த்தியது.
537 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடந்தது.
முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 418 ஓட்டங்களும், ஜிம்பாப்பே 251 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 369 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, ஜிம்பாப்பே அணிக்கு 537 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்பே அணி யூசுப், போஷ் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இமாலய வெற்றி
அணித்தலைவர் கிரேக் எர்வின் 49 (77) ஓட்டங்களில் வெளியேற, வெல்லிங்டன் மசகட்ஸா 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஜிம்பாப்பே அணி 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய பிளெஸ்ஸிங் முஸரபாணி, 29 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசி களத்தில் நின்றார்.
தென் ஆப்பிரிக்க அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. கார்பின் போஷ் (Corbin Bosch) 5 விக்கெட்டுகளும், கோடி யூசுப் (Codi Yusuf) 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |