கனடாவில் தெற்காசிய மக்கள்தொகை 4 மடங்கு உயர்வு
கனடாவில் தெற்காசிய மக்கள் தொகை நான்கு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
கனடாவில் தெற்காசிய மக்கள் தொகை கடந்த 25 ஆண்டுகளில் அதிரடி வளர்ச்சியை கண்டுள்ளது.
1996-ல் 6.69 லட்சம் பேர் இருந்த நிலையில், 2021-ல் அது 2.6 மில்லியனாக உயர்ந்துள்ளது.
அதாவது தெற்காசிய மக்கள் கிட்டத்தட்ட கனடாவின் மிகப்பெரிய இனக்குழுவாக மாறியுள்ளனர். தற்போது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 7.1 சதவீதம் பங்கு வகிக்கின்றனர்.

அடுத்த 2041-க்குள் இந்த எண்ணிக்கை 47 லட்சம் முதல் 65 லட்சம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, கனடாவின் மக்கள் தொகையில் 12.5 சதவீதம் வரை தெற்காசியர்கள் இருப்பார்கள்.
முக்கிய நாடுகள்
இதில் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகிறது, சுமார் 44 சதவீதம் இந்தியாவில் பிறந்தவர்கள்.
பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், கயானா, டிரினிடாட் & டொபாகோ போன்ற நாடுகளிலிருந்தும் பெருமளவு குடிபெயர்ந்துள்ளனர்.
கல்வி மற்றும் வேலை
25-54 வயதுக்குள் உள்ள தெற்காசியர்களில் 58 சதவீதம் பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் கல்வி பெற்றுள்ளனர். இது கனடாவின் பிற இனக்குழுக்களை விட அதிகம்.
இதனால் தொழில்நுட்பம், சுகாதாரம், நிதி, தொழில் முனைவோர் துறைகளில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
குடும்ப அமைப்பு
சுமார் 45 சதவீதம் பேர் குழந்தைகளுடன் இரண்டு பெற்றோர்களும் கொண்ட குடும்பமாக வாழ்கின்றனர். மேலும் 20 சதவீதம் பேர் பல தலைமுறைகளை கொண்ட குடும்பங்களில் வசிக்கின்றனர். இது சமூக உறுதியை அதிகரிக்கிறது.
பண்பாட்டு பங்களிப்பு
தமிழ், பஞ்சாபி, ஹிந்தி, உருது, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகள், திருவிழாக்கள், ஊடகங்கள், வணிகங்கள் ஆகியவற்றின் மூலம் கனடாவின் பன்முகத்தன்மையை வளப்படுத்துகின்றனர்.
எதிர்காலம்
பெண்களின் வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, மொழி ஆதரவு போன்ற துறைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தெற்காசியர்கள் கனடாவின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
South Asian population Canada 2025, Canada immigration South Asians, Indian diaspora growth Canada, Pakistani Sri Lankan Bangladeshi Canadians, Canada multiculturalism South Asians, South Asian education levels Canada, Economic impact South Asians Canada, Ontario British Columbia Alberta South Asians, Canada housing multigenerational families, Future projections South Asian Canadians