ராட்சத ஒலிப்பெருக்கிகளை எல்லையில் இருந்து அகற்றும் தென்கொரியா - ஏன் வைக்கப்பட்டது தெரியுமா?
எல்லையில் வைக்கப்பட்டுள்ள ராட்சத ஒலிப்பெருக்கிகளை அகற்றுவதாக தென்கொரியா அறிவித்துள்ளது.
ஒலிப்பெருக்கிகளை அகற்றும் தென்கொரியா
கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியாக லீ ஜே மியுங் பதவி ஏற்றார்.
தனது அண்டை நாடான வட கொரியா உடனான பதற்றத்தை தணிக்கவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மீண்டும் கட்டி எழுப்பவும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதன் தொடக்கமாக வட கொரியா எல்லை அருகே வைக்கப்பட்டிருந்த ராட்சத ஒலிப்பெருக்கிகளை அகற்ற உள்ளதாக தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதிக்குள் அனைத்து ஒலிப்பெருக்கிகளையும் அகற்ற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், தென் கொரியாவுடன் பேசுவதில் எந்த ஆர்வமும் இல்லை என வடகொரியா இந்த முன்மொழிவுகளை நிராகரித்துள்ளது.
என்ன காரணம்?
தென் கொரியா நாட்டிற்குள், பலூன்கள் மூலம் குப்பைகளை வட கொரியா கொட்டியதற்கு பழி வாங்கும் விதமாக, எல்லையில் ராட்சத ஒலிபெருக்கிகளை நிறுத்தி வடகொரியா எதிர்ப்பு பிரச்சாரங்களை ஒலிபரப்பியது.
இதற்கு பதிலடியாக, தென்கொரியாவின் எல்லையில் உள்ள டாங்சன் என்ற கிராமத்தைக் குறிவைத்து வட கொரியா ராட்சத ஒலிபெருக்கிகளை வைத்து, பேய் அலறுவது, கார் விபத்துகள் ஏற்படுவது, உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, ஓநாய்கள் ஊளையிடுதல், போன்ற வினோத சத்தங்களை எழுப்பி உளவியல் தாக்குதலை தொடுத்தது.
இது எங்களைப் பைத்தியமாக்குகிறது. இந்த சத்ததால் இரவில் தூங்க முடிவதில்லை. பல மாதங்களாகவே தொடர்ந்து இதைச் செய்து வருவதால் தூக்கமின்மை, தலைவலி, மனஅழுத்தம் என உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக டாங்சன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |