டேட்டிங் மற்றும் திருமணம் செய்ய ரூ.12 லட்சம் வழங்கும் அரசு - எந்த நாட்டில் தெரியுமா?
தென் கொரியா டேட்டிங் மற்றும் திருமணம் செய்து குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
பிறப்பு விகித குறைவு
குழந்தை பிறப்பு விகிதம் குறைவு காரணமாக, மக்கள் தொகை சரிவு உலகளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Credit : hxyume/E+/Getty Images
தென் கொரியாவும் கடுமையான குழந்தை பிறப்பு விகித குறைவை சந்தித்து வருகிறது.
தென் கொரியா மக்கள், நீண்ட வேலை நேரம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை காரணமாக உறவுகள், திருமணம், குழந்தை பெறுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
இதனை மாற்றி குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்க தொகை வழங்கும் முயற்சியை தென் கொரியா அரசு கையிலெடுத்தது.
டேட்டிங் செல்ல ஊக்கத்தொகை
டேட்டிங் செல்லும் தம்பதிகளுக்கு 500,000 வோன் (இந்திய மதிப்பில் ரூ.31,000) வரை வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தை உணவு, திரைப்படங்கள் அல்லது சேர்ந்து பொழுதை கழிப்பதற்கும் செலவிடலாம். குடும்ப உறுப்பினர்கள் உடன் வந்தால் அவர்களின் செலவுகளுக்கும் பணம் வழங்கப்படுகிறது.

Credit : Canva
பூசானின் சஹா மாவட்டத்தில், அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வுகள் மூலம் சந்தித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் தம்பதிகளுக்கு 20 மில்லியன் வோன் (இந்திய மதிப்பில் ரூ.12–13 லட்சம்) வரை வழங்கப்படுகிறது.
இதில் டேட்டிங், நிச்சயதார்த்த சந்திப்புகள் மற்றும் தேனிலவு பயணத்திற்கான நிதியும் அடங்கும்.

Credit : Bloomberg
ஜியோசாங் கவுண்டியில், 19 முதல் 45 வயதுடைய புதுமணத் தம்பதிகள், 3 ஆண்டுகளுக்கு வருடாந்திர ஊக்கத்தொகையை பெறுகிறார்கள்.
இந்த திட்டத்தின் பலனாக , கடந்த சில மாதங்களாக தென் கொரியாவின் பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், வேகமாக வயதான மக்கள்தொகையுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 88.5 டிரில்லியன் வோன் (64.8 பில்லியன் டொலர் ) சுகாதார அமைச்சகம் ஒதுக்கியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |