தேசிய அணியிலிருந்து இரட்டை சகோதரிகளை வெளியேற்றிய தென் கொரியா: இணையத்தில் வெளியான தகவலால் சிக்கல்
தென் கொரிய தேசிய கைப்பந்து அணியில் விளையாடிவந்த இரட்டையர்களான விளையாட்டு வீராங்கனைகள் திடீரென அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நாட்டின் மிகப்பிரபலமான பெண்கள் அணியில் விளையாடிவந்தவர்கள் Lee Jae-yeong மற்றும் Lee Da-yeong (24)என்னும் இரட்டையர்கள்.
ஆனால், இணையத்தில் அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒன்று அவர்கள் அணியிலிருந்தே வெளியேற காரணமாக அமைந்துள்ளது. அப்படி என்ன குற்றச்சாட்டு?
Jae-yeongம் Da-yeongம் பள்ளியில் படிக்கும் நாட்களில் bullyகளாக, அதாவது மற்றவர்களை வம்புக்கிழுத்து தொல்லை கொடுப்பவர்களாக இருந்தார்களாம்.
மற்ற மாணவர்களை அடிப்பது, அவமானப்படுத்துவது, அவர்களிடமிருந்து பணத்தை திருடுவது, கத்தியைக் காட்டி மிரட்டுவது என அவர்கள் இருவரும் சக மாணவர்களுக்கு தொல்லை கொடுத்துவந்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இரட்டையர்கள் இருவரும் அணியிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
மேலை நாடுகளில் இப்படி வம்புக்கிழுக்கப்படுவதால் தற்கொலை செய்துகொண்ட மாணவ மாணவியரும் உண்டு.
அப்படி வம்புக்கிழுப்பவர்களுக்கெல்லாம், Jae-yeongமற்றும் Da-yeongக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை ஒரு பாடம், எச்சரிக்கை மணி எனலாம்!

