வடகொரியாவிடம் பகிரங்க வருத்தம் தெரிவித்த நாடொன்றின் ஜனாதிபதி
தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் வடகொரியாவிற்கு அனுப்பப்பட்ட ட்ரோன்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
வடகொரியாவுடனான உறவு
கடந்த ஆண்டு தென் கொரிய ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து லீ ஜே மியுங் (Lee Jae Myung), வடகொரியாவிற்கு ட்ரோன்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிகழ்வினை குறிப்பிட்டு வடகொரியாவுடனான உறவுகளை சரிசெய்ய முயன்று வருகிறார்.
ஜனவரியில் வடகொரியாவில் நடந்த ட்ரோன் ஊடுருவலில் தங்களுக்கு அதிகாரப்பூர்வ பங்கு எதுவும் இல்லை என்று தென் கொரியா ஆரம்பத்தில் மறுத்தது. அதிகாரிகளோ இது பொதுமக்களின் செயல் என்று கூறினர்.
அதனைத் தொடர்ந்து, கண்காணிப்பு உபகரணங்களை ஏற்றிச் சென்ற ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும், தெற்கிலிருந்து எல்லையைக் கடக்கும் மேலும் ட்ரோன்களைக் கண்டறிந்தால் "கடுமையான பதிலடி" கொடுக்கப்படும் என்று பிப்ரவரியில் வடகொரியா எச்சரித்தது.
அதன் பின்னர் தென் கொரியா ட்ரோன் அனுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தொடங்கியது.

ட்ரோன்கள் குறித்து வருத்தம்
இந்த நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் வடகொரியாவிற்குள் அனுப்பப்பட்ட ட்ரோன்கள் குறித்து லீ வடகொரியாவிடம் வருத்தம் தெரிவித்தார்.
ட்ரோன்கள் அனுப்பப்பட்ட விடயத்தில் அரசாங்க அதிகாரிகள் ஈடுபட்டிருந்ததை ஒரு விசாரணை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார். அத்துடன் இந்த செயல்களை "பொறுப்பற்றவை" என்று குறிப்பிட்டார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "தேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவரும், பணியில் இருக்கும் ஒரு இராணுவ வீரரும் இதில் சம்பந்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தனிநபர்களின் பொறுப்பற்ற மற்றும் அசட்டுத்தனமான செயல்களால் ஏற்பட்ட தேவையற்ற இராணுவப் பதற்றங்கள் குறித்து வடகொரியாவிடம் நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |