பணிநேரத்தை அதிகப்படுத்தும் திட்டம்! தென் கொரிய அமைச்சருக்கு கடும் விமர்சனம்
தென்கொரியாவில் பணிநேரத்தை வாரத்தில் 52யில் இருந்து 69 ஆக உயர்த்தும் திட்டத்தை அமைச்சர் முன்மொழிந்தார்.
69 மணிநேர பணி
தென் கொரிய அரசாங்கம் பொதுமக்களின் பணி-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தும் முயற்சியில், 52 மணிநேர வாராந்திர பணி நேர வரம்பை 69 மணிநேரமாக உயர்த்த முன்மொழிந்துள்ளது.
இதுகுறித்து பேசிய அமைச்சர் லீ ஜங்-சிக், நாட்டின் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் கவலைகளுக்கு இடையில், மூன்றில் ஒரு பங்காக வரம்பை அதிகரிப்பது பணி செய்யும் தாய்மார்களுக்கு அதிக விருப்பத்தை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், 'கர்ப்ப காலத்தில் அல்லது குழந்தைகளை வளர்க்கும்போது பணிநேரத்தை குறைக்கும் உதவும் துணிச்சலான நடவடிக்கைகளை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்' எனவும் கூறியுள்ளார்.
எழுந்த விமர்சனம்
ஆனால், அரசின் இந்த நடவடிக்கைகள் பணி செய்யும் தாய்மார்களுக்கு உதவாது என விமர்சகர்கள் சாடியுள்ளனர். கொரிய மகளிர் ஒருங்கிணைந்த சங்கம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'ஆண்கள் நீண்ட நேரம் உழைத்து, பராமரிப்பு பொறுப்புகள் மற்றும் உரிமைகளில் இருந்து விலக்கு பெறுவார்கள், பெண்கள் அனைத்து பராமரிப்புப் பணிகளையும் செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளது.
உலகின் மிகவும் குறைவான கருவுறுதல் விகிதத்தைக் கொண்ட நாடாக தென் கொரியா உள்ளது குறிப்பிடத்தக்கது.