தென் கொரியாவில் இடிந்து விழுந்த பாலம்: 4 பேர் பலி! வைரலாகும் வீடியோ
தென் கொரியாவில் நெடுஞ்சாலை கட்டுமான தளத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இடிந்து விழுந்த பாலம்
தென் கொரியாவின் ஆன்சேயாங்(Anseong) நகரில் நெடுஞ்சாலை கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் வரை காயமடைந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சியோலில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் இந்த விபத்தானது செவ்வாய்க்கிழமை காலை நடந்துள்ளது.
BIG BREAKING NEWS
— WW3 Monitor (@WW3_Monitor) February 25, 2025
At least 3 construction workers killed, 5 injured after portion of highway overpass collapsed near Anseong, South Korea
🇰🇷🇰🇷‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️ pic.twitter.com/qk6LSajfLe
உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, பெரிய அளவில் தூசி மற்றும் குப்பைகள் காற்றில் பரவியதை தெளிவாக காட்டுகின்றன.
தேசிய தீயணைப்புத் துறையின் அறிக்கையின்படி, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் ஒருவர் லேசான காயமடைந்துள்ளார்.
உயிரிழந்த சீன நாட்டினர்
உயிரிழந்தவர்களில் இரண்டு சீன நாட்டினரும், இரண்டு தென் கொரிய குடிமக்களும் அடங்குவர் என்று உள்துறை அமைச்சக அதிகாரி உறுதிப்படுத்தினார்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த கட்டுமான திட்டத்தின் முக்கிய ஒப்பந்ததாரரான ஹூண்டாய் இன்ஜினியரிங் நிறுவனம், இந்த சோகமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, நடந்து வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |