தென் கொரியாவில் 7 வயது மாணவிக்கு கத்திக்குத்து: உண்மையை ஒப்புக்கொண்ட ஆசிரியர்
தென் கொரியாவில் 7 வயது மாணவியை கத்தியால் குத்தி கொன்றதை 40 வயதுடைய ஆசிரியர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர்
டேஜியோன் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஏழு வயது சிறுமியை கத்தியால் குத்தி கொன்றதை 40 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
திங்கட்கிழமை இந்த தாக்குதல் நடந்துள்ள நிலையில், ஆசிரியர் தனக்குத் தானே காயப்படுத்திக் கொண்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால் இன்னும் முறையாக அவர் கைது செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்ட சிறுமி, ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில் மாணவியாக இருந்தார்.
ஆசிரியர் மற்றும் சிறுமிக்கு இடையே ஏதேனும் உறவு இருந்ததா என்பது இதுவரை தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சிறுமி
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுமியின் கழுத்து மற்றும் முகத்தில் கத்திக் குத்து காயங்களுடன் அவரது பாட்டி கண்டுபிடித்துள்ளார்.
பின், பாட்டி உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததுடன், சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |