50 ஆண்டுகள் பழமையான வரைப்படம்: உக்ரைனில் குழம்பி நிற்கும் ரஷ்ய வீரர்கள்!
உக்ரைன் போரில் 1970ம் ஆண்டை சேர்ந்த சோவியத் கால வழித்தட வரைபடங்களை ( MAPS) ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதால் ரஷ்ய படையெடுப்பின் வேகம் குறைந்து இருப்பதாக மேற்கத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிகையானது கிட்டத்தட்ட 70வது நாளை தொடப்போகிறது, இவை ரஷ்யா மற்றும் உலக நாடுகள் எதிர்பார்த்ததை விட மிகவும் நிதானமான முன்னேற்றமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவம் 1970ம் ஆண்டை சேர்ந்த சோவியத் கால வழித்தட வரைபடங்களை ( MAPS)பயன்படுத்துவதன் காரணத்தால், டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் தாமதம் அடைந்து வருவதாக மேற்கத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மூந்தைய வழித்தட வரைபடங்களை ( MAPS)பயன்படுத்துவதன் மூலம் புதிதாக எழுப்பபட்டுள்ள உக்ரைனின் புதிய கட்டமைப்புகள், ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.
இவ்வாறு ரஷ்ய ராணுவம் வைக்கும் தவறுதலான தாக்குதல் குறிகளால் பொதுமக்கள் பெருமளவு தாக்கப்பட்டு பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போர்க்களத்தில் களமிறங்கிய ரஷ்யர்கள் படை! வீடியோ ஆதாரம்
மேலும் இந்த 50 ஆண்டுகளுக்கு மூந்தைய வழித்தட வரைபடங்களை ( MAPS) ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதன் மூலம், ரஷ்ய ராணுவ வீரர்களும் குழப்பம் அடைந்து அவர்களின் முற்றுகை வேகம் ஒருநாளைக்கு அரை மைல் என்ற கணக்கிலேயே இருப்பதாக மேற்கத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.