தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற அன்புமணியின் மனைவி கைது
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சௌமியா அன்புமணி கைது
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
மேலும், அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
அந்தவகையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால், போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சௌமியா அன்புமணி தலைமையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, போராட்டம் நடத்த முயன்ற பாமகவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில், பசுமைத்தாயகம் தலைவரும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவியுமான சௌமியா அன்புமணியும் கைது செய்யப்பட்டார். அவர்கள் வாகனத்தில் ஏறும்போது அரசுக்கு எதிராகவும் பெண்களுக்கு நீதி வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |