விண்வெளியில் ஜெல்லி மீன்! வானத்தை ஒளிரச்செய்த SpaceX ரொக்கெட்., ஓர் வித்தியாசமான நிகழ்வு
எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனம் ஏவிய ரொக்கெட் மூலம் வானத்தில் ஒரு ஜெல்லி மீன் போன்ற காட்சி தோன்றியது, பார்வையாளர்களுக்கு இந்த காட்சி ஒரு விருந்தாக அமைந்தது.
Starlinks எனப்படும் 53 இணைய செயற்கைக்கோள்களை SpaceX நிறுவனம் நேற்று அதன் ஃபால்கன் 9 ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. அப்போது, Florida நகர வாசிகள் ஒரு காட்சி விருந்தை அனுபவித்தனர்.
ஃபால்கன் 9 ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட செய்தி எந்த உற்சாகத்தையும் ஏற்படுத்தவில்லை, ஆனால் அதன் பின் விளைவு வானத்தை ஒளிரச் செய்தது நகரத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களை மயக்கியது.
விஷமாக மாறிய மீன்! அடுத்தடுத்து பீதியை கிளப்பும் கேரளா
Photo: Erik Kuna / twitter: @SuperclusterHQ
வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த அதிசய காட்சி, விண்வெளியில் ஒரு ஒளிரும் ஜெல்லி மீன் மிதப்பதுபோல்அமைந்திருந்தது. இந்த வினோதமான வண்ண மேகங்களை உருவாக்கிய ராக்கெட்டின் பின்னால் விரிவடையும் வாயுக்களிலிருந்து இது "விண்வெளி ஜெல்லிமீன்" என்ற பெயரினைப் பெற்றது.
இந்த நிகழ்வை விளக்கி கூறிய , ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் மிஷன் நிர்வாகத்தின் இயக்குனர் ஜெசிகா ஜென்சன், "அடிப்படையில், என்ன நடக்கிறது என்றால், வெளியே இன்னும் இருட்டாக இருக்கிறது, ஆனால் அந்த ரொக்கெட் விண்வெளியில் இருப்பதால் அதிலிருந்து வெளியான வாயுக்கள் சூரிய ஒளியால் ஒளிரச் செய்கின்றன" என்றார்.
லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை!
So cool.
— Edward Russell (@ByERussell) May 6, 2022
A @SpaceX launch seen from a friend piloting an early morning departure from @MCO today. pic.twitter.com/PPBzZUGnWZ
சான் அன்டோனியோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஏரோடைனமிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியரான கிறிஸ் கோம்ப்ஸ், இது இயற்பியல் மற்றும் சரியான நேரத்தின் கலவையாகும் என்று கூறினார்.
வியாழன் விடியற்காலையில் (உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:45 மணியளவில்) ரொக்கெட் ஏவப்பட்டது.
Falcon 9’s first stage has landed on the A Shortfall of Gravitas droneship pic.twitter.com/Yvw0IDTGa1
— SpaceX (@SpaceX) May 6, 2022