ரசிகர்களுக்கு திக் திக்...கோல் அடித்த அசத்திய நிக்லாஸ் புல்க்ரக்: டிராவில் முடிந்த ஸ்பெயின்-ஜேர்மனி போட்டி
2022ம் ஆண்டுக்கான கத்தார் கால்பந்து உலக கோப்பை போட்டியில் குரூப் ஈ பிரிவில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மன் மற்றும் ஸ்பெயின் இடையிலான போட்டி டிராவில் முடிந்துள்ளது.
ஸ்பெயின் - ஜேர்மன் அணிகள் மோதல்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று குரூப் ஈ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் ஜேர்மன் அணிகள் மோதின.
முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல்கள் எதுவும் அடிக்காததால் 0-0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் நீடித்தன.
சுப்பர் 16 சுற்றுக்கு செல்ல இரு அணிகளுக்கும் இந்த போட்டியின் வெற்றியானது அவசியமானது என்ற சூழ்நிலையில் ஆட்டம் பரபரப்பு ஆனது.
அப்பொது பெஞ்சில் இருந்து வந்த எட்டு நிமிடங்களுக்குப் பிறகு ஸ்பெயின் வீரர் ஆல்வரோ மொராட்டா 62வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
An exciting one ends in points shared. ?????@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022
இந்த கோலினால் கிட்டத்தட்ட உலக கோப்பை கனவை இழந்து விட்ட ஜேர்மனி, பதில் கோலை அடித்து போட்டியை சமன் செய்ய தொடர்ந்து முயற்சித்து வந்தனர்.
இறுதியில் ஜெர்மனியின் மாற்று ஆட்டக்காரர் நிக்லாஸ் ஃபுல்க்ரக் ஹோம் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு எதிராக முதல் கோலை அடித்து போட்டியை சமன் செய்ய உதவினார்.
இதன்முலம் இறுதி ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மன் மற்றும் ஸ்பெயின் இடையிலான போட்டி டிராவில் முடிந்துள்ளது.
fifa.com
நீடிக்கும் வாய்ப்பு
உலக கோப்பை கால்பந்து தொடரில் முன்னணி அணியாக கருதப்படும் ஜேர்மனி இதுவரை நடைபெற்ற முதல் இரண்டு லீக் போட்டியில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் இருந்து இதுவே முதல் முறை.
Spain are on ? of Group E. Which two sides will advance?#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022
புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருந்தாலும் தற்போது ஸ்பெயின் உடனான ஆட்டத்தை ஜேர்மனி சமன் செய்து இருப்பதன் மூலம் சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
ஸ்பெயினை பொறுத்தவரை அடுத்து ஜப்பான் உடன் நடைபெறும் லீக் போட்டியை சமன் செய்தாலே சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.