புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பிரித்தானியாவிற்கு முற்றிலும் மாறாக.,கடுமையான அணுகுமுறையை கையாளும் நாடு
ஸ்பெயின் நாடு புலம்பெயந்தோரை திருப்பி அனுப்புவதில் பிரித்தானியாவிற்கு மாறான அணுகுமுறையை கையாள்கிறது.
சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோர்
பிரித்தானியா ஐரோப்பிய நாடான பிரான்ஸுடன் "One in, One out" என்ற திட்டம் மூலம் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் தொடர்பிலான அணுகுமுறையை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது.
முன்னதாக, பிரித்தானிய அரசாங்கம் சிறிய படகுகள் மூலம் புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக நுழையும் நெருக்கடியின் பிடியை இழந்து வருவதாக கூறப்பட்டது.
மேலும், புலம்பெயர்ந்தோர் பிரித்தானிய கடற்கரைகளுக்கு வரவேற்கப்படுவதுடன் ஹொட்டல்களில் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.
ஆனால், இவற்றுக்கு மாறாக ஸ்பெயினின் சட்டவிரோத குடியேற்றத்திற்கான அணுகுமுறை உள்ளது.
அதாவது, கடந்த ஏப்ரல் மாதம் CATE என்று அழைக்கப்படும் புலம்பெயர்வோர் மற்றும் திருப்பி அனுப்பும் மையம் கடலோர நகரமான Motrilயில் திறக்கப்பட்டது. இங்கு, சட்டவிரோதமாக கடற்கரை வழியாக புலம்பெயர்பவர்கள் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
கடுமையான அணுகுமுறை
ஞாயிற்றுக்கிழமை அன்று மொராக்கோவில் இருந்து விரைவு படகில் வந்தவர்கள் Sotillo கடற்கரைக்கு ஓடியபோது பிடிபட்டனர்.
அவர்கள் சில வாரங்களுக்குள்ளாகவே மொராக்கோவிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர். அதுவரை அவர்கள் CATE-யின் 10 அடி வேலிகளுக்கு பின்னால் திறம்பட கூடாரங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஸ்பெயினின் இதுபோன்ற கடுமையான அணுகுமுறை பலனளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், சமீபத்திய ஆண்டுகளில் கிரனாடா பகுதிக்கு ஆபத்தான பயணங்களின் எண்ணிக்கை சரிவை கண்டுள்ளது.
அதாவது, இதுவரை 29 புலம்பெயர்ந்தோர் மட்டுமே இந்தப் பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் மிக சமீபத்திய எண்ணிக்கை 9 ஆகும்.
இதற்கிடையில், 'தேசிய பிரதேசத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவு செயல்படுத்தப்படும் வரை' புலம்பெயர்ந்தோர் 9 பேரும் CATEயில் இருப்பார்கள் என கிரனாடாவில் உள்ள ஸ்பானிஷ் அரசின் துணைப் பிரதிநிதி Josh Antonio உறுதிப்படுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |