ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்?
இரண்டே நாட்களில் மொராக்கோ நாட்டவர்கள் சுமார் 60,000 பேர் ஸ்பெயினுக்கு சொ ந்தமான பகுதி ஒன்றிற்குள் நுழைந்ததைக் கண்டு ஐரோப்பாவே பதறிய நிலையில், அவர்களில் சுமார் 45,000 பேர் சில மணி நேரத்துக்குள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்...
மொராக்கோ நாட்டவர்களான சுமார் 60,000 பேர், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை காலைக்குள், ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டா என்னும் நகருக்குள் நுழைந்தனர்.

அத்தனை பேர் கொண்ட கூட்டம் நினைத்திருந்தால் நிலப்பரப்பு வழியாக சியூட்டாவுக்குள் நுழைந்திருக்கமுடியும்.
ஆனால், உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சியூட்டாவுக்குள் நுழைய, ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்கள் நம் நாட்டுக்குள்ளும் வந்துவிடுவார்களோ என மற்ற ஐரோப்பிய நாடுகள் பதறின.

மீண்டும் நாடு திரும்பிய மொராக்கோ நாட்டவர்கள்
அவர்கள் ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டாவுக்குள் நுழைந்ததால், ஸ்பெயின் அவர்களை தடுப்புக்காவலில் அடைத்து, ஸ்பெயினில் தங்க சட்டப்படி அனுமதி இல்லாதவர்கள் என கருதப்படுவோரை மொராக்கோ நாட்டுக்கே திருப்பி அனுப்பியிருக்கக்கூடும்.
அதில் மீதமுள்ளவர்கள் ஸ்பெயினுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கவும் கூடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்குள் நுழைந்திருக்கவும் முடியும்.
ஆனால், சியூட்டாவுக்குள் நுழைந்த சில மணி நேரத்துக்குள், சுமார் 50,000 பேர் மீண்டும் தங்கள் சொந்த நாடான மொராக்கோவுக்கே திரும்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடயம் என்னவென்றால், சியூட்டாவில் தங்களுக்கு உணவோ, தங்க இடமோ கிடைக்கவில்லை என்றும், ஆகவேதான் தாங்கள் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பி விட்டதாகவும் அவர்களில் பலர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஐந்து மணி நேரம் நீந்தி வந்த தங்களை ஸ்பெயின் ராணுவம் உதைத்துத் துரத்தியதாகவும், தங்கள் கைகளில் பனம் இருந்தும் உணவு கிடைக்கவில்லை என்றும், இங்கு எதற்காக வந்தோம் என வருந்தியதாகவும் சிலர் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |