ஸ்பெயின், பிரான்ஸ் புதிய எரிவாயு குழாய்...துணைப் பிரதமர் தெரேசா ரிபெரா முக்கிய அறிவிப்பு
- புதிய எரிவாயு குழாய் ஒன்று அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் செயல்படத் தொடங்கும் தெரேசா ரிபெரா அறிவிப்பு
- புதிய எரிவாயு குழாய் பைரேனியனில் இருந்து ஸ்பெயின் வரை செயல்படும்
மேற்கு ஐரோப்பாவில் புதிய எரிவாயு குழாய் ஒன்று அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் செயல்படத் தொடங்கும் என்று ஸ்பெயினின் சுற்றுச்சூழல் அமைச்சரும், துணைப் பிரதமருமான தெரேசா ரிபெரா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ரஷ்ய உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கை தொடங்கியதை அடுத்து, பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பல அடுக்கு பொருளாதார தடையை ரஷ்யாவை எதிர்த்து விதித்தனர், இதற்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த எரிவாயு விநியோகத்தை பாதியாக குறைத்தது.
AFP
இவற்றால் பெரும் சிரமத்திற்குள் தள்ளப்பட்ட ஐரோப்பிய நாடு தங்களது எரிவாயு தேவையை தீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் மேற்கு ஐரோப்பாவில் புதிய எரிவாயு குழாய் ஒன்று அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் செயல்படத் தொடங்கும் என்று ஸ்பெயினின் சுற்றுச்சூழல் அமைச்சரும் துணைப் பிரதமருமான தெரேசா ரிபெரா தெரிவித்துள்ளார்.
இந்த புதிய எரிவாயு இணைப்பு குழாய் தெற்கு எல்லைப் பகுதியில் சுமார் 8 அல்லது 9 மாதங்களில், அதாவது பைரேனியனில் இருந்து ஸ்பெயின் வரை செயல்படும் என்று தெரேசா ரிபெரா TVEயிடம் தெரிவித்தார்.
EPA-EFE/STEPHANIE LECOCQ
இதனைத் தொடர்ந்து, வியாழனன்று ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்(Olaf Scholz) போர்ச்சுகலில் இருந்து ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் வழியாக ஒரு குழாய்த்திட்டத்திற்கு வலுவான ஆதரவு தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: பெற்றோர் ஒரே பாலினத்தவர்கள் என்பதால்...ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!
மேலும் அவர் மூன்று நாடுகளின் தலைவர்களுடனும் ஐரோப்பிய ஆணையத்துடனும் இந்த திட்டத்தை குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் அத்தகைய பைப்லைன் இப்போது விநியோக நிலைமையை பெருமளவில் விடுவிக்கும் என்றும் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார்.