₹15,000 கோடி இழப்பு! ஸ்பெயினை உலுக்கிய வரலாறு காணாத மின்வெட்டு
ஸ்பெயினை உலுக்கிய வரலாறு காணாத மின்வெட்டு காரணமாக ₹15,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத மின்வெட்டு
ஸ்பெயின் நாட்டில் இரு தினங்களுக்கு முன்பு திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த பெரிய மின்சாரத் தடை காரணமாக நாடு முழுவதும் பெரும் பாதிப்பு உண்டானது.
ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட் உட்பட அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த எதிர்பாராத மின்வெட்டு காரணமாக அத்தியாவசிய சேவைகள் முற்றிலும் ஸ்தம்பித்தன. மின்சார ரயில் சேவையும் முழுமையாக நிறுத்தப்பட்டது.
அத்துடன் இதனால் விமான சேவைகள் மற்றும் பிற போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நாடு முழுவதும் இரவு வரை நீடித்த இந்த மின் தடை காரணமாக ஸ்பெயின் இருளில் மூழ்கியது.
இந்த மின்சார பிரச்சினை ஸ்பெயினின் அண்டை நாடுகளான பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் எதிரொலித்தது. சுமார் 24 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஸ்பெயினில் மின் வினியோகம் சீரமைக்கப்பட்டது.
₹15,000 கோடி இழப்பு
தற்போது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மின்வெட்டு ஏற்படுத்திய பொருளாதார சேதம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த மின்வெட்டு காரணமாக சுமார் ₹15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1% ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |