150 ஆண்டுகால வரலாற்றில்.,முதல் ராணியாக பொறுப்பேற்கும் 20 வயது இளவரசி
ஸ்பெயின் நாட்டின் முதல் ராணியாக 20 வயது இளவரசி லியோனோர் பொறுப்பேற்க உள்ளார்.
அரியணை
ஸ்பானிய வாரிசுரிமைப் போரில் ஹப்ஸ்பர்க் வம்சத்தினரைத் தோற்கடித்ததைத் தொடர்ந்து, 1700களின் முற்பகுதியில் இருந்து ஸ்பானிய மகுடம் போர்பன் வம்சத்தினரால் ஆளப்பட்டு வருகிறது.
Photo: Carlos Alvarez/Getty Images
1975ஆம் ஆண்டில் மன்னர் முதலாம் ஜுவான் கார்லோஸுடன் முடியாட்சி மீண்டும் நிறுவப்பட்டது. அவர் ஸ்பெயினை ஜனநாயகத்திற்கு மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
பின்னாளில் அவர் பதவியைத் துறந்து (2014யில்) அரியணையைத் தனது மகன் ஃபெலிப்பிடம் ஒப்படைத்தார்.
Photo: Paolo Blocco
இளவரசி லியோனோர்
இந்த நிலையில் அவரது மகளும், இளவரசியுமான 20 வயது லியோனோர் நாட்டின் முதல் ஆளும் இரணியாக மகுடம் சூட உள்ளார்.
இதன்மூலம் 150 ஆண்டுகளில் முதல் முறையாக, ஸ்பெயின் ஒரு ஆளும் இராணியைப் பெற உள்ளது.
1800களில் ஆட்சி செய்த இரண்டாம் இசபெல்லாவிற்குப் பிறகு, நாட்டின் முதல் ஆளும் இராணியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Photo: Getty Images
லியோனோர், தனது உயர் கல்வியை வேல்ஸில் உள்ள UWC அட்லாண்டிக் கல்லூரியில் சர்வதேச இளங்கலைப் பட்டயப் படிப்பைத் தொடங்கினார்.
அதன் பிறகு நாட்டின் வருங்காலத் தலைமைத் தளபதியாக தனது இராணுவப் பயிற்சியைத் தொடங்கினார்.
Photo: Getty Images
Photo: Reuters
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |