ஈரானில் மீண்டும் தூதரகம் திறக்கும் ஐரோப்பிய நாடு... லெபனான் மீதான தாக்குதலுக்கு கண்டனம்
லெபனான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் மூலம், இஸ்ரேல் மத்திய கிழக்கில் புதிதாக எட்டப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக ஸ்பெயினின் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரெஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வதேச சட்டத்தை மீறி
ஈரான் மற்றும் லெபனானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை, மேற்கத்திய நாடுகளிலேயே மிகவும் கடுமையாக விமர்சிக்கும் நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது.

மட்டுமின்றி, பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோதமானது என்று குறிப்பிட்ட ஒரு போரில் ஈடுபடும் எந்தவொரு விமானத்திற்கும், தனது வான்வெளியை அனுமதிக்க முடியாது என்றும் மறுத்துள்ளது.
இந்த நிலையில், கீழ்சபையில் உள்ள அவை உறுப்பினர்களிடம் அல்பெரெஸ் உரையாற்றுகையில், நேற்று, இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டு, சர்வதேச சட்டத்தை மீறி லெபனான் மீது நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசியதை நாம் பார்த்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
அமைதிக்கான முயற்சி
முன்னதாக, பிராந்தியத்தில் அமைதியை அடையும் நம்பிக்கையில், தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தை ஸ்பெயின் மீண்டும் திறக்கும் என்று அல்பெரெஸ் வியாழக்கிழமை அறிவித்தார்.

தெஹ்ரானில் உள்ள நமது தூதரைத் திரும்பி வந்து, மீண்டும் தனது பதவியைப் பொறுப்பேற்று, நமது தூதரகத்தை மீண்டும் திறக்குமாறும், ஈரானியத் தலைநகரம் உட்பட சாத்தியமான அனைத்துத் தரப்பிலிருந்தும் இந்த அமைதிக்கான முயற்சியில் நாம் அனைவரும் இணையுமாறும் நான் அறிவுறுத்தியுள்ளேன் என அல்பாரெஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |