2026 ஐரோப்பாவின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை - ஸ்பெயின் முன்னிலை
Spain Tops Europe Passport Ranking 2026: 2026 ஐரோப்பாவின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் ஸ்பெயின் முன்னிலை வகிக்கிறது.
ஸ்பெயின் முதலிடம்
2026-ஆம் ஆண்டுக்கான உலக பாஸ்போர்ட் தரவரிசையில் ஐரோப்பிய நாடுகள் பல முன்னிலை வகித்துள்ளன. இதில் ஸ்பெயின் ஐரோப்பாவில் முதலிடத்தையும், உலகளவில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது.

ஸ்பெயின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 121 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். மேலும், 42 நாடுகளில் ‘Visa On Arrival’ வசதி உள்ளது. 11 நாடுகளுக்கு ‘ETA’ (Electronic Travel Authorization) மூலம் பயணம் செய்யலாம்.
லக்ஸ்சம்பர்க் உலகளவில் 5-வது இடத்தில் உள்ளது. 122 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் அனுமதி, 41 நாடுகளில் ‘Visa On Arrival’, 10 நாடுகளில் ‘ETA’ வசதி உள்ளது.
பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் இணைந்து 6-வது இடத்தில் உள்ளன. இந்நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 121 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
7-வது இடத்தில் நெதர்லாந்து, ஜேர்மனி, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, ஸ்வீடன் ஆகிய ஆறு நாடுகள் இணைந்து உள்ளன. இந்நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 120 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
ஆனால், உலகளவில் முதலிடம் பெற்ற நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை அல்ல. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) முதலிடம், சிங்கப்பூர் இரண்டாம் இடம், மலேசியா மூன்றாம் இடம் பெற்றுள்ளன.
இந்த தரவரிசை, குறுகிய கால பயணங்களுக்கு விசா இல்லாமல் செல்லும் வாய்ப்புகளை மட்டுமே காட்டுகிறது. வேலை அல்லது நிரந்தர வதிவிடம் பெற தனித்தனி குடியேற்ற விதிகள் அமுலில் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |