ருமேனியாவிற்குள் அத்துமீறிய ட்ரோன்: சுட்டு வீழ்த்திய ஸ்பெயினின் F-18 ரக போர் விமானம்
ருமேனியா வான்வெளியில் அத்துமீறிய ட்ரோனை ஸ்பெயினின் F-18 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்
ஞாயிற்றுக்கிழமை ருமேனியா நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத ஆளில்லா விமானத்தை ஸ்பெயின் நாட்டின் விமானப் படைக்கு சொந்தமான F-18 ரக போர் விமானம் வெற்றிகரமாக இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்த தகவலை ருமேனிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மோல்டோவா எல்லைக்கு அருகில் உள்ள கிழக்கு துறைமுக நகரான கலாடிக்கு வடக்கே சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்தில் சந்தேகத்திற்குரிய ஆளில்லா விமானம் கண்டறியப்பட்டது.

இந்த ஆளில்லா விமானம் மோல்டோவாவிலிருந்து ருமேனியாவுக்குள் நுழைந்த பிறகு இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனின் பாகங்கள் கலாடி மாகாணத்தில் மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று வெவ்வேறு ஆளில்லா விமானங்களை ருமேனியா பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |