முத்த சர்ச்சையில் சிக்கிய கால்பந்து சங்கத் தலைவர்: ராஜினாமா செய்தார்
மகளிர் உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்ற பின், நட்சத்திர வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் ஸ்பானிஷ் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் முத்தமிட்ட விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
ராஜினாமா செய்தார்
லூயிஸ் ரூபியேல்ஸ் ஜென்னியின் உதட்டில் முத்தமிட்ட விடயத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாக, அவர் ராஜினாமா செய்யும்வரை விளையாடமாட்டோம் என அவர் சார்ந்த அணி வீராங்கனைகள் அறிவித்தனர்.
ஸ்பானிஷ் கால்பந்து ஃபெடரேஷனும் லூயிஸ் ரூபியேல்ஸை பதவி விலகும்படி அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமாவுக்கான காரணம் குறித்து லூயிஸ் ரூபியேல்ஸ்...
தான் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கமளித்த லூயிஸ் ரூபியேல்ஸ், தான் தன் தந்தை மற்றும் மகள்களுடன் அது குறித்து பேசியதாகவும், தனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலரும் தனக்கு ஆலோசனை கூறியதாகவும் தெரிவித்தார்.
BREAKING: Rubiales has resigned as President of the Royal Spanish Football Federation following the scandal over him kissing Spain’s Jenni Hermoso at the Women’s World Cup Final. He revealed the news in a world exclusive interview for @PiersUncensored.pic.twitter.com/lVM6xn7Y3K
— TalkTV (@TalkTV) September 10, 2023
இது தான் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல, தன்னுடைய நடக்கை மூன்றாம் தரப்பினரையும் பாதிக்கலாம் என்றும் கூறியுள்ள லூயிஸ் ரூபியேல்ஸ், தான் தற்போதைய கால்பந்து ஃபெடரேஷனின் தலைவரான Pedro Rochaவிடம், தனது ராஜினாமாவைக் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |