இந்தியாவில் 7 பேரால் துஷ்பிரயோகத்திற்கு ஆளான வெளிநாட்டு பெண் சொல்வது என்ன?
இந்தியாவில் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சுற்றுலாப் பயணி பெண், இந்திய மக்கள் அன்பானவர்கள் தான் ஆனால் குற்றவாளிகளை தான் குறை சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணி பெண்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயின் கணவருடன் சுற்றுலா வந்த பிரேசிலிய பெண் பெர்னாண்டா கூட்டு துஷ்பிரயோகத்திற்கு ஆளானார்.
இச்சம்பவம் தேசிய அளவில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பெர்னாண்டா தனது கணவருடன் பீகார் வழியாக நேபாளம் புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணுக்கு கணவர் கண்முன்பே நடந்த கொடூரம்! வேதனையுடன் வெளியிட்ட வீடியோ
20,000 கிலோ மீற்றர் பயணம்
அப்போது பேசிய அவர், 'இந்திய மக்க நல்லவர்கள். நான் மக்களைக் குறை கூறவில்லை, ஆனால் குற்றவாளிகளை குற்றம் கூறுகிறேன். இந்தியர்கள் என்னை நன்றாக நடத்தினார்கள். என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். அமைதியாகவும், அழகாகவும் இருந்ததால் இரவு தங்குவதற்கான இடத்தை தெரிவு செய்தோம்.
அங்கே தனியாக வாழ்ந்தால் பரவாயில்லை என்று நினைத்தோம். கடந்த 6 மாதங்களாக நாங்கள் இந்தியாவில் இருந்தோம், சுமார் 20,000 கிலோ மீற்றர் பயணம் செய்துள்ளோம்.
எங்களுக்கு எங்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இது முதல் முறையாக நடந்துள்ளது. பெண்களிடம் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள தங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளுமாறு நான் கூற விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவில் இருந்து எனக்கு நல்ல நினைவுகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |