தென்னாபிரிக்க வகை கொரோனா வைரஸுக்கான பிரத்யேக தடுப்பூசி ரெடி: மாடர்னா அறிவிப்பு
தென்னாபிரிக்க வகை உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக தடுப்பூசி, தற்போது சோதனை செய்ய தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் 501.V2 அல்லது B.1.351 என அழைக்கப்படும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
தென்னாப்பிரிக்க மாறுபாடு தற்போதைய வகைகளில் மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது, ஏனெனில் இது மற்ற வைரஸ் வகைகளால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களைக் கூட மீண்டும் கடுமையாக பாதிக்கச்செய்யும் அளவிற்கு வீரியம் கொண்டதாக உள்ளது.
மேலும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரபலமான தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை என்பதையும் நிரூபித்துள்ளது.
இதனால், தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸுக்கான பிரத்யேக தடுப்பூசியை மாடர்னா தற்போது தயாரித்துள்ளது.
இந்நிலையில், அந்த தடுப்புசியை சோதனைக்கு உட்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
மாடர்னாவின் முந்தையை தடுப்பூசிக்கான சோதனையைப் போல், இந்த பிரத்தியேக தடுப்பூசியை பரிசோதிக்க நீண்ட காலம் தேவைப்படாது என FDA கூறியுள்ளது.
மாடர்னா தனது உலகளாவிய உற்பத்தி திறனை உயர்த்துவதாகவும், தேவைப்பட்டால் 2022 ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் டோஸ் வரை தடுப்பூசி தயாரிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.