இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் : ஒன்றிய அரசு உத்தரவு
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தலைவரான சஞ்சய் சிங்
இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு உள்ளான பிரிஷ் யூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங்கே மீண்டும் இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து, டெல்லியில் பல நாட்கள் போராட்டம் நடத்திய வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தன்னுடைய இத்தனை ஆண்டு கால கடின உழைப்பு அனைத்தையும் கைவிட்டு, ‘நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்’ என கண்ணீருடன் அறிவித்தார்.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதே சமயம் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்தார்.
இவை இந்திய மல்யுத்த சங்கம் மற்றும் மத்திய பாஜக அரசு மீது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட்
இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
PTI
பிரிஷ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சங்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டதை மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
UnionSportsMinistry, WrestlingFederationofIndia, WFI , SanjaySingh, SakshiMalik