உளவு பார்த்த 15 ரஷ்ய தூதர்கள்! அதிரடி நடவடிக்கை எடுத்த ஐரோப்பிய நாடு
தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 15 ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதாக நார்வே அரசு தெரிவித்துள்ளது.
உளவு குற்றச்சாட்டு
ரஷ்யா கடந்த ஆண்டு உக்ரைன் மீது போரைத் தொடங்கியதில் இருந்து ரஷ்ய தூதர்கள் தங்களது நாட்டில் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக பல நாடுகள் தங்கள் நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின. இந்த நிலையில் நார்வே நாட்டில் 15 ரஷ்ய தூதர்கள் உளவு பார்த்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
@ANNIKA BYRDE / AFP
தலைநகர் ஓஸ்லோவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் குறித்த அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
ரஷ்ய தூதர்கள் வெளியேற்றம்
இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக் கருதி உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 15 ரஷ்ய தூதர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதாக நார்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் Anniken Huitfeldt கூறுகையில், 'நார்வேயில் ரஷ்ய உளவுத்துறை நடவடிக்கைகளின் நோக்கத்தை குறைத்து, அதன் மூலம் நமது தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், எதிர்ப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். நார்வேக்கு விசாவிற்கு விண்ணப்பிக்கும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் விசா வழங்க மாட்டோம்.
நாங்கள் வழக்கமான ராஜதந்திரிகளைப் பற்றி பேசவில்லை, ஆனால் ராஜதந்திர மறைப்பின் கீழ் உள்ள புலனாய்வு அதிகாரிகள், அவர்களின் செயல்பாடுகள் நார்வே நலன்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன' என தெரிவித்துள்ளார்.
@Mads Claus Rasmussen/ Ritzau Scanpix/via REUTERS