ஐபிஎல் போட்டிகளில் மீம்ஸ் ஆகும் ரியாக்சன் - மனம் திறந்த காவ்யா மாறன்
ஐபிஎல் போட்டிகளின் போது, தனது ரியாக்சன்கள் மீம்ஸ் ஆகுவது குறித்து காவ்யா மாறன் பேசியுள்ளார்.
காவ்யா மாறன்
சன் குழும தலைவர் கலாநிதிமாறனின் ஒரே மகள் ஆவார் காவ்யா மாறன்.
மேலும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், இங்கிலாந்தின் The Hundred தொடரில் Northern Superchargers உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர் ஆவார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசியாக 2016 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது. 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை வென்றது.
ஐபிஎல் தொடர் தொடங்கி விட்டாலே, காவ்யா மாறன் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பார். ஹைதராபாத் அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண காவ்யா மாறன் மைதானத்திற்கு வந்து விடுவார்.
காவ்யா மாறன் மைதானத்தில் எங்கு அமர்ந்திருந்தாலும், கேமரா அவர் பக்கம் திரும்பாமல் இருக்காது. எதிர் அணி வீரர்கள் சிக்ஸர் அடிப்பது, கேட்சை தவற விடுவது போன்றவற்றிற்கு காவ்யா மாறன் கொடுக்கும் ரியாக்சன்கள், மீம்ஸ்களாக மாறி இணையத்தில் வலம் வருகிறது.
காவ்யா மாறன் மீம்ஸ்
இந்நிலையில், அந்த மீம்ஸ் க்ருய்து பேசிய காவ்யா மாறன், "ஐதராபாத் மைதானத்தில் என்னால் வேறு எந்த இடத்திலும் அமர முடியாது. அதனால் கேமரா மேன் என்னை எளிதாக படம்பிடித்துவிட முடியும்.
ஆனால் சென்னை மற்றும் அகமதாபாத் மைதானங்களில் கேமராக்கள் என்னை தேடி பிடித்துவிடுகிறது. அதனால் தான் அவை மீம்களாக வெளியாகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அது குறித்து கவலையில்லை.
சன்ரைசர்ஸை அணியை பொறுத்தவரை, அது உண்மையிலேயே இதயத்திற்கு நெருக்கமானது. போட்டியின் போது எங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் என்னுடைய எமோஷனை வெளிக்காட்டிவிடுகிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |