U19 ஆசியக்கிண்ணம்: ஆப்கானிஸ்தானை சம்பவம் செய்த இலங்கை..பட்டியலில் முதலிடம்
துபாயில் நடந்த ஆப்கானிஸ்தான் U19 அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை U19 அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
235 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
U19 ஆசியக் கிண்ணப்போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
The Lankan bowling unit were in control throughout the innings, but some late strikes with the bat have pushed Afghanistan to what seems like a par score 🙌#DPWorldMensU19AsiaCup2025 #AFGvSL #ACC pic.twitter.com/gr4LR5ByLv
— AsianCricketCouncil (@ACCMedia1) December 15, 2025
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 235 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஓஸ்மான் 52 (87) ஓட்டங்களும், ஃபைசல் 39 (63) ஓட்டங்களும் எடுத்தனர். சேத்மிகா மற்றும் துல்நித் 3 விக்கெட்டுகளும், ரசித், சமிகா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இலங்கை வெற்றி
பின்னர் ஆடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
விரான் சமுடிதா 62 (83) ஓட்டங்களும், சமிகா ஹீனதிகலா ஆட்டமிழக்காமல் 51 (57) ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தானின் ஓமர்சாய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி (2 வெற்றிகள்) புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
Sri Lanka clinch a nail-biter to book their place in the semi-finals of the #DPWorldMensU19AsiaCup2025 🇱🇰#AFGvSL #ACC pic.twitter.com/RMIaoNhbVS
— AsianCricketCouncil (@ACCMedia1) December 15, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |