அசலங்கா அதிரடி., அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

David Warner Sri Lanka Cricket Sri Lanka Australia
By Ragavan Jun 21, 2022 06:52 PM GMT
Report

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3-1 என தொடரை வென்றது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 2-1 என முன்னிலை வகித்த நிலையில், 4-வது ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கை வெற்றி பெறும் முனைப்பில் அவுஸ்திரேலிய அணியும் களமிறங்கின.

டாஸ் வென்ற அவுஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, முதலில் துடுப்பாடிய இலங்கை அணியில், டாப் 3 வீரர்களான டிக்வெல்லா(1), நிசாங்கா(13) மற்றும் குசால் மெண்டிஸ்(14) ஆகிய மூவரும் அணியின் எண்ணிக்கை வெறும் 34 ரன்களாக இருந்தபோதே 10 ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க: தமிழக வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி 

அசலங்கா அதிரடி., அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை! | Sri Lanka Beat Australia Fourth Odi Win Series

அதன்பின்னர் அசலங்காவும் தனஞ்செயா டி சில்வாவும் இணைந்து பொறுப்புடன் விளையாடி 4-வது விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த தனஞ்செயா டி சில்வா 60 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் தசுன் ஷனாகா 4 ஓட்டங்களுடன் நடையை கட்டினார். வெல்லாலகே 19 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய அசலங்கா சதமடித்தார். 106 பந்தில் 110 ஓட்டங்கள் அடித்து 48-வது ஓவரின் 4-வது பந்தில் அசலங்கா ஆட்டமிழக்க, 49 ஓவரில் 258 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. அசலங்காவின் பொறுப்பான ஆட்டத்தால் தான் இலங்கை அணி 258 ஓட்டங்களையாவது அடித்தது.

இதையும் படிங்க: ட்விட்டரில் கவனம் செலுத்தாமல் விளையாட்டை பாருங்க! இந்திய வீரருக்கு தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் அறிவுரை 

அசலங்கா அதிரடி., அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை! | Sri Lanka Beat Australia Fourth Odi Win Series

259 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.

அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஒரே ஒரு ஓட்டத்தில் சதத்தை தவறவிட்டார். பாட் கம்மின்ஸ் 35 ஓட்டங்கள் அடித்து கடைசி வரை போராடி பார்த்தார். ஆனால் அவரும் 35 ஓட்டங்கள் அடித்து 49-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

50 ஓவரில் 254 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அணி ஆல் அவுட்டாக, 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3-1 என ஒருநாள் தொடரை வென்றது. 

Gallery
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US