முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த இலங்கை: சம்பவம் செய்த மூவர்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நிசங்கா, குசால் மெண்டிஸ் அரைசதம்
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஜமைக்காவில் நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ஓட்டங்கள் குவித்தது.
பதும் நிசங்கா 79 ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 72 ஓட்டங்களும், அசலங்கா 45 ஓட்டங்களும் விளாசினர். சீல்ஸ், ஃபோர்டே மற்றும் சேஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
மேற்கிந்திய தீவுகள் ஆல்அவுட்
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.2 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

ஷாய் ஹோப் 56 ஓட்டங்களும், ஜஸ்டின் கிரேவ்ஸ் 45 ஓட்டங்களும், சேஸ் 33 ஓட்டங்களும் விளாசினர்.
மிரட்டலாக பந்துவீசிய துஷ்மந்தா சமீரா 4 விக்கெட்டுகளும், தீக்ஷணா 2 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ, ஹசரங்கா மற்றும் அசலங்கா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |