உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பில் இணைய இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகள் கோரிக்கை
சீனா ஆதரிக்கும் உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பான RCEP-ல் இணைய இலங்கை உட்பட நான்கு நாடுகள் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
RCEP அதிகாரிகள்
ஹொங்ஹொங், இலங்கை, சிலி மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகளே Regional Comprehensive Economic Partnership என்ற வர்த்தக கூட்டமைப்பில் இணைய கோரிக்கை விடுத்துள்ளன.
RCEP அமைப்பில் தற்போது சீனா, ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் பத்து உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், RCEP அதிகாரிகள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், புதிய விண்ணப்பதாரர்களை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு சில ஆட்சேபனைகள் இருப்பதாகவும், நான்கு நாடுகளையும் கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
விவாதிக்கப்படும்
RCEP கூட்டமைப்பில் இணைய முன்வரும் எந்தவொரு நாட்டையும் தாங்கள் ஏற்க தயாராக இருப்பதாகவே முதன்மை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவின் வர்த்தக அமைச்சர் தெங்கு சஃப்ருல் அஜீஸ் தெரிவிக்கையில்,
புதிய RCEP உறுப்பினர்கள் குறித்த எந்தவொரு முடிவும், அக்டோபரில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கூட்டமைப்பின் தலைவர்கள் சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்றார்.
இதனிடையே, RCEP கூட்டமைப்பானது அமெரிக்காவின் வரிகளுக்கு எதிரான சாத்தியமான இடையகமாக சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் அதன் உறுப்பினர்களிடையே போட்டியிடும் போக்கு காரணமாக அதன் விதிகள் வேறு சில பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்களை விட பலவீனமாகக் கருதப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |