கார் விபத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்., வைத்தியசாலையில் அனுமதி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்னே (Lahiru Thirimanne) கோவிலுக்கு செல்லும் வழியில் கார் விபத்தில் காயமடைந்தார்.
வியாழக்கிழமை காலை நடந்த விபத்தில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
என்ன நடந்தது..?
கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திரிமான்னேவின் கார் விபத்துக்குள்ளானது.
திறப்பனே அருகே இவர் சென்ற கார் மீது லாரி பலமாக மோதியது. இதனால், காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
எனினும் இந்த சம்பவத்தில் திருமன்னேவுக்கு பாரிய காயம் ஏற்படாததால் இலங்கை ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
திருமன்னே விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் தற்போது, அனுராதபுரத்தில் உள்ள திறப்பனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திருமன்னே 2023 ஜூலை மாதம் விடைபெற்றார். அவர் 44 டெஸ்ட், 127 ஒருநாள் மற்றும் 26 T-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தற்போது அவர் Legends Cricket Trophy-யில் New York Superstar Strikers அணிக்காக விளையாடி வருகிறார்.
முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Lahiru Thirimanne, Lahiru Thirimanne hospitalised after car crash, Sri Lankan Cricketer, Sri Lanka Cricket