ஆப்கானிஸ்தானில் இலங்கையர்கள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர்? வெளியான அதிமுக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.
இது தொடர்பான தகவலை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சமாக 43 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் பணிபுரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பிரஜைகளை சொந்த நாட்டுக்கு திரும்ப வைக்க சர்வதேச ஆதரவாளர்களுடன் சேர்ந்து இலங்கை முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தூதரகம் காபூலில் உள்ள ஹொட்டலில் இருந்து செயல்படும் நிலையில் அங்கு தற்போது இலங்கையை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது.
தூதரகத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள 43 இலங்கை பிரஜைகளின் விவரங்கள் உள்ளன. அதே நேரத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இது தொடர்பான சில விவரங்களையும் கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் இலங்கை பிரஜைகள் பெரும்பாலும் ஐக்கிய நாடுகள், சர்வதேச அமைப்புகள், நேட்டோ இராணுவத் தளங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலை செய்கிறார்கள் எனவும் இலங்கை வெளியுறவுதுறை தெரிவித்துள்ளது.