பாகிஸ்தானில் எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் இவர் தான்! பெயர் மற்றும் விபரம் வெளியானது
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் Sialkot நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில், முகாமையாளராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், இன்று அங்கிருக்கும் தொழிற்சாலை ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, அதன் பின் தீ வைத்து கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் உயிரிழந்த இலங்கையர் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. அவரின் பெயர் Priyantha diyawadana என்பதும், இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் Sialkot நகரில் இருக்கும் Rajco தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
Priyantha diyawadana கடந்த 2010-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் வசித்து வந்ததாகவும், இதற்கு முன்பு இவர் லாகூர் மற்றும் பைசலாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில் பணிபுரிந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
https://t.co/3OyZB3KT60
— Khawaja Talha ?? (@imKhTalha) December 3, 2021
زرا سوچیں اس کے گھر والوں پر کیا بیت رہی ہوگی؟
ہمارا سب سے بڑا المیہ یہ ہے کہ ہم صرف نام و نہاد اسلام کے ٹھیکدار ہیں، جہاں اسلام نام کی کوئی شے نہیں، معیشت سود پر، عدالتیں ظلم پر، تعلیم تقسیم پر، معاشرے میں ہر برائی موجود ہے#Sialkot #sialkotincident pic.twitter.com/OaoTzjaett
இதனால் பாகிஸ்தானியர்கள் பலர் இதற்கு மன்னிப்பு கேட்டு அவரின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.