இலங்கையைச் சேர்ந்த முதிய தம்பதி சென்னையில் கைது
தமிழக சட்டசபை தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்ததாக, இலங்கை தம்பதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஆவண சரிபார்ப்பு
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தம்பதி குணேஸ்வரன் (69), நகுலாம்பிகை (60). சென்னை விமான நிலையத்திற்கு வந்த இவர்களிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் ஆவண சரிபார்ப்பு செய்தனர்.

அப்போது இந்திய ஆதார் அட்டை, இந்திய வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது.
இலங்கை தம்பதி கைது
இதுதொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இருவரும் வாக்களித்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து மாம்பலம் பொலிஸாரிடம் இலங்கை தம்பதியர் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |