வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட 40க்கும் மேற்பட்ட இலங்கைப் பெண்கள்: வெளிவரும் பின்னணி
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் 40க்கும் மேற்பட்ட இலங்கைப் பெண் தொழிலாளர்கள், நாடு திரும்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலர் விசிட் விசாவில்
துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகமும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸும் தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு விமான டிக்கெட்டுகள் மற்றும் பயண ஆவணங்களை வசதி செய்து கொடுத்து அவர்களை காப்பாற்ற முன்வந்துள்ளது.
Credit: khaleejtimes
குறித்த இலங்கையர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் சிலர் விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து, வேலை வாய்ப்புகளைத் தேடியுள்ளனர்.
ஆனால் அவர்களால் உரிய காலத்தில் வேலைவாய்ப்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை மற்றும் அவர்களின் விசா காலாவதியானது. சிலருக்கு அவர்களது வேலைவாய்ப்பு விசாக்கள் காலாவதியாகிவிட்டன, ஆனால் குடும்ப சூழல் காரணமாக அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாமல் போயுள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட அப்படியான தொழிலாளர்கள் குழுக்களாக துபாயில் இருந்து கொழும்புக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். முதல் குழு கடந்த மாதம் இலங்கைக்கு திரும்பியது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
துணைத் தூதரக அலுவலகம்
இதில் இலங்கை திரும்பிய பெண் ஒருவர் தெரிவிக்கையில், இந்த நெருக்கடியான சூழலில் எங்களுக்கு எந்த வழியும் தென்படவில்லை, நம்பிக்கையற்றவர்களாக உணர்ந்தோம், ஆனால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் துபாயில் உள்ள துணைத் தூதரக அலுவலகம் எங்களுக்கு உதவ முன்வந்தது, அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்ப்போம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் துணைத் தூதரக அதிகாரி அலெக்சி குணசேகர, 42 பெண்கள் சிக்கித் தவிக்கும் வீட்டை பார்வையிட்டார். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில், அந்த 42 பெண்களும் குழுக்களாக இலங்கை திரும்ப உள்ளனர்.
இவர்களுக்கான விமான கட்டணமே மிகப் பெரிய சவாலாக தங்கள் முன் இருந்தது என குறிப்பிட்டுள்ள அலெக்சி குணசேகர, ஆனால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உதவ முன்வந்துள்ளதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் 9 மில்லியன் மக்கள் தொகையில், இலங்கையர்கள் மட்டும் 3.17 சதவீதம் அல்லது 0.32 மில்லியன் மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |