சென்னை விமானநிலையத்தில் இலங்கையர் இருவர் திடீர் மரணம்
சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த இருவர் திடீரென மரணமடைந்துள்ளனர்.
சென்னை விமானநிலையத்துக்கு வந்த பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது மாரடைப்பால் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.
இதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில், இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவகஜன்லிட்டி என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியா வந்தவர் மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்ததும் தெரியவந்தது.
இதேபோன்று இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த ஆண் பயணி ஒருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
அவரது பெயர் ஜெயக்குமார் என்பதும், சோதனைகளை முடித்துவிட்டு நடந்து வந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் இலங்கையர் இருவர் மரணமடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |