நிதியமைச்சர் இல்லாத புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு: இலங்கையில் தொடரும் குழப்பம்!
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்ற நிலையில், இவற்றில் நிதியமைச்சர் இல்லாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி, தீவிரமான உள்நாட்டு கலவரமாக வெடித்ததை தொடர்ந்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதார நெருக்கடியை நிலைப்படுத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக அரசாங்கத்தின் புதிய பிரதமராக கடந்த வியாழன் கிழமை நியமிக்கபட்டார்.
இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க-வை தவிர வேறு உறுப்பினர்கள் இல்லாத நிலையில், அனைத்து கட்சிகளின் கூட்டு அமைச்சரவை உருவாக்க தான் திட்டமிட்டு இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முக்கிய எதிர்கட்சியான SJB-யில் இருந்து பிரிந்து வந்த 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் இலங்கையின் மற்றொரு முக்கிய எதிர்கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என மொத்தம் 9 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் இன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.
இவற்றில் கவனிக்கதக்க விஷயம் என்வென்றால், சுகாதாரம், கல்வி, சட்டம் போன்ற துறை அமைச்சர்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், இலங்கையின் முக்கிய பிரிச்சனையான பொருளாதார நெருக்கடியை கையாளும் நிதியமைச்சர் இல்லாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த வார இறுதிக்குள் புதிய நிதியமைச்சர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: குரங்கம்மை நோயை கட்டுப்படுத்த... பெரியம்மை தடுப்பூசிகளை வாங்கி குவிக்கும் பிரித்தானியா
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் நிதியமைச்சரை நியமிப்பதில் தாமதம் காட்டுவது IMF பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தலாம் என இலங்கையின் மத்திய வங்கி தலைவர் எச்சரித்துள்ளார்.