இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி - இஸ்ரேலிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!
இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைகள், சுற்றுலா அல்லது வேறு நோக்கங்களுக்காக தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான உதவியை இப்போது நேரடியாகக் கோர முடியும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி
இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 – 23ஆம் திகதிகளுக்கு இடையில் அறுகம்பே பகுதியில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் உள்ளதாக, இந்திய உளவு அமைப்புகள், இலங்கைக்கு அறிவித்திருந்தன.
இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கை சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு இலங்கை காவல் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
உதவி தேவைப்படும் பார்வையாளர்கள், சுற்றுலாத் தொடர் மற்றும் கடல்சார் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தமயந்த விஜய ஸ்ரீ அவர்களை +94718592651 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ இலங்கைக்கு வருகை தந்துள்ள இஸ்ரேலியர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அவர் நேரடியாக மேற்கண்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விடயங்களில் அடையாளத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம் என்பதால், தேவையான தகவல்களை வழங்குமாறு இஸ்ரேலியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |