இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் - ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிப்பு?
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலானது திட்டமிட்டப்படி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டாலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற ஊகங்கள் குறையவில்லை.
கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்தானது சொந்த கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சி தரப்பிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?
சட்டமா அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமே நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வியும் அரசியல் தரப்பில் எழுந்து வருகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் ஆறு வருட கால எல்லையானது சர்வசன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரம் இல்லாமல் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது.
ஆறு ஆண்டுகளுக்கு மேல் பதவிக் காலத்தை நீடிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால், தற்போதைய ஐந்தாண்டு வரம்பை வாக்கெடுப்பு நடத்தாமல் மேலும் ஓராண்டுக்கு நீடிக்க முடியும் என வாதிக்கப்பட்டு வருகிறது.
இத்தாலியில் நிகழ்ந்த ஆனந்த் அம்பானி திருமண விழா - விருந்தினர்களுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா?
மேலும் அனைத்து சாத்தியமான மற்றும் அசாத்தியமான முயற்சிகள் தொடர்ந்து வாதிடப்பட்டடு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |