ரூ 22 மில்லியன் முறைகேடு... சென்னை ஊழியர்களைக் குற்றஞ்சாட்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது சென்னை அலுவலகத்தில் பணியாற்றும் பல இந்திய ஊழியர்கள் 22 மில்லியன் ரூபாய் மதிப்பிலான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை அலுவலகம்
சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ரசீதுகள், பணம் செலுத்தும் விவரங்கள் மற்றும் கையொப்பங்களை திருத்துவதன் ஊடாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டதாக இலங்கையின் தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் நிகழ்ந்த நிதி முறைகேடு தொடர்பாக, அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
அதில், சென்னையில் உள்ள நிதித் துறையில் பணிபுரியும், இந்தியக் குடியுரிமை கொண்ட சில ஊழியர்கள், ரசீதுகள், பணம் செலுத்திய விவரங்கள் மற்றும் கையொப்பங்களை மோசடியாகத் திருத்தியமைப்பதன் மூலம்,
விசாரணை தொடக்கம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மொத்தம் 22 மில்லியன் இந்திய ரூபாயை முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் எந்த காலகட்டத்தில் இந்த முறைகேடு நடந்தது என்பதை அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை.

மேலும், இந்திய சட்ட அமலாக்கத் துறையிடம் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது, மேலும் இழந்த தொகையை மீட்பதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, மின்னஞ்சல் கணக்கு ஊடுருவலுக்கு உள்ளானதன் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு சேவை வழங்குநருக்குத் தவறுதலாகச் செய்யப்பட்ட பெருந்தொகை குறித்தும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |