நடுவானில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு., மீண்டும் கொழும்பில் தரையிறக்கம்
தென்கொரியாவை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் () விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் இலங்கை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானம் திங்கட்கிழமை (ஜூலை 08) மாலை 06.20 மணிக்கு கொழும்பின் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையத்தை நோக்கி பயணத்தை தொடங்கியது.
கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள்., இந்தியாவிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் சந்தேகம்
ஆனால் சிறிது நேரம் கழித்து நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக சுமார் இரண்டு மணிநேர பயணத்தின் பின்னர், விமானம் மீண்டும் இரவு 8.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த விமானத்தில் 144 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
பயணிகளை வேறொரு விமானத்தின் மூலம் தென்கொரியாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
SriLankan Airlines Flight Returns to Colombo, SriLankan Airlines Flight Technical Issue, Colombo's Katunayake Bandaranaike International Airport