இலங்கையில் இருந்து நியூசிலாந்து வந்தது ஏன்?கொல்லப்பட்ட தாக்குதல்தாரி, இலங்கையர் சொன்ன காரணம்
நியூசிலாந்தின் சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையர் கத்தி குத்து தாக்குதல் நடத்தியதால், கொல்லப்பட்ட நிலையில், அவர் தொடர்பான பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
நியூசிலாந்தின் Auckland's LynnMall-ல் இருக்கும், Countdown supermarket-ல் கடந்த வெள்ளிக் கிழமை 32 வயது மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த Ahamed Aathil Mohamed Samsudeen என்பவர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில், 7 பேர் காயமடைந்தனர்.
இதில் மூன்று பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையில் அவர் தொடர்பான புகைப்படம் நேற்று வெளியானது. தாக்குதலில் ஈடுபட்ட இவர் தீவிரவாத வார்த்தைகளை தூண்டுவதாக கூறி, நியூசிலாந்தின் கண்காணிப்பிலே இருந்ததகாக கூறப்பட்டது.
இந்நிலையில், Ahamed Aathil Mohamed Samsudeen குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இலங்கையின் Batticaloa மாவட்டத்தின் Kathankudy-யை சேர்ந்தவர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மாணவர் விசா மூலம் இலங்கையில் இருந்து நியூசிலாந்திற்கு சென்ற இவர், ஒரு இலங்கை தமிழ் இஸ்லாமியர் ஆவார்.
இவர் மற்றும் இவரின் தந்தை அரசியல் பின்னணி காரணமாக, இலங்கை அதிகாரிகளுடன் பல பிரச்சனைகளை அனுபவித்ததாக கூறி, நியூசிலாந்தில் அகதி அந்தஸ்து தேடி சென்றுள்ளார்.
இவரின் காரணத்தை ஏற்றுக் கொண்ட நியூசிலாந்து, கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் திகதி அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது.
ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்ததால், பொலிசார் அது குறித்து நடத்திய விசாரணையில், இவர் தீவிரவாதத்தை ஆதரிக்கும் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார் என்பது தெரியவர, அதைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு ஆக்லாந்து விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஏனெனில் ஆக்லாந்தில் மசூதியில் நபர் ஒருவரிடம் ஐ.எஸ்க்கு ஆதரவாக தான் சிரியா செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். அது மற்றும் தீவிரவாத கருத்துக்களை பரப்பியது போன்ற காரணங்களால் பொலிசார் அவரை கைது செய்தனர்.
இப்படி பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்ததால், கடந்த 2018-ஆம் ஆண்டு அவருடைய அகதி அந்தஸ்து ரத்து செய்ய முடிவு செய்த போது, Ahamed Aathil Mohamed Samsudeen அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
என்னால் இலங்கைக்கு செல்ல முடியாது, எனக்கு இலங்கை செல்ல பயமாக இருக்கிறது. அங்கிருக்கும் அதிகாரிகளை நினைத்து பயப்படுகிறேன். அந்த பயம் காரணமாகத் தான் நான் நாட்டைவிட்டு வெளியேறினேன்.
தமிழ் இளைஞர்கள் பலர் இது போன்று கடுமையான பிரச்சனைகளை அங்கு எதிர் கொள்கின்றனர். தமிழர்கள் என்பதால் தமிழீல விடுதலை புலிகளுடன் தொடர்பில் இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் கைது செய்வது போன்ற பல சித்ரவதைகளை அனுபவிப்பதாக கூறியுள்ளார்.
அதன் காரணமாக அவரை நாடு கடத்தாமல் நியூசிலாந்து அரசு தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலே அவரை வைத்திருந்தது. இது போன்ற சூழ்நிலையில் தான் கடந்த வெள்ளிக் கிழமை கத்தி குத்து சம்பவத்தை Ahamed Aathil Mohamed Samsudeen செய்துள்ளார்.
இந்த கத்தி குத்து தாக்குதல் குறித்து இலங்கையில் உள்ள Sri Lankan Muslim community கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து இலங்கையர்கள் மற்றும் குறிப்பாக இலங்கை இஸ்லாமியர் சமூகத்தின் சார்பாக, இந்த அர்த்தமற்ற மற்றும் பயங்கரமான வன்முறைச் செயலை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம்.
துயரத்தின் இந்த தருணத்தில் நியூசிலாந்து மக்களுக்கு எங்கள் ஒற்றுமையை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.