எங்களை தவறாக பேசாதீங்க! நாம் குற்றவாளிகள் அல்ல, அகதிகள்
கடந்த சில நாட்களுக்கு திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொலிசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்
இதில் ஒவ்வொரு அறையாக சென்று நடத்தப்பட்ட சோதனையில் 60 செல்போன்கள், ஒரு டேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாலை தொடங்கிய சோதனை பகல் 12 மணி வரை நடைபெற்றது.
பொலிசாரிடம் இந்த அதிரடி நடவடிக்கையை கண்டித்தும், தங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திரும்ப ஒப்படைக்கக்கோரியும், முகாமில் உள்ளவர்கள் பொலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அங்குள்ள ஈழ அகதி ஒருவர் போட்டியொன்றை வழங்கியுள்ளார். தற்போது அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்.