என் பையனுக்கு பேர் வெச்சதே ஸ்ரீமதி தான்! மாணவியின் தாயார் உருக்கம்
ஸ்ரீமதி தனது தம்பியை அம்மா மாதிரி பார்த்துக் கொண்டாள் என தாய் செல்வி உருக்கம்
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான ஸ்ரீமதி, அவரது பாடல்களுக்கு நடனமாடுவாள் என தாய் செல்வி தகவல்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தனது தம்பியை அன்னைப் போல் பார்த்துக் கொண்டதாக தாயார் செல்வி உருக்கத்துடன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாணவி மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீமதியின் தாய் செல்வி தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார். இந்த நிலையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஸ்ரீமதியின் தாய் கூறுகையில்,
'தம்பிக்கு சந்தோஷ் என்று பேர் வெச்சதே என் பொண்ணு தான். அவர்களுக்குள் நிறைய தடவை சண்டை வரும்போதெல்லாம் நான் தான் டா உனக்கு பேர் வெச்சேன் என்று ஸ்ரீமதி கூறுவாள்.
நான் எங்கேயாவது வெளியே போனாலும் அம்மா மாதிரி என் பையன பாத்துப்பா. நடிகர் விஜய் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவரது பாடல்களுக்கு நடனம் ஆடுவாள். விஜய்யை ஏதாவது சொன்னால் அவளுக்கு கோபம் வந்துவிடும். மேலும் பாடல்கள் நன்றாக பாடுவாள்' என தெரிவித்துள்ளார்.