மடகாஸ்கரில் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டு போட்டி: கூட்ட நெரிசலில் 12 பேர் பலி
மடகாஸ்கர் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
12 பேர் உயிரிழப்பு
வெள்ளிக்கிழமை மடகாஸ்கர் தலைநகர் அந்தனானரிவோவில் உள்ள மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளது.
அத்துடன் இந்த கூட்ட நெரிசலில் 80 பேர் வரை காயமடைந்து இருப்பதாக மடகாஸ்கர் நாட்டின் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே(Christian Ntsay) தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்காலிகமானது என்றும் இவை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள மருத்துவமனையில் வைத்து பிரதமர் என்ட்சே செய்தியாளர்களுடம் தெரிவித்தார்.
சுமார் 50,000 பார்வையாளர்கள் பரியா மைதானத்தில் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழாவை காண பிரதான வாயிலை குவிந்த போது இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான முழுமையான காரணம் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |