தந்தை பிறந்தநாளில் இணையும் அண்ணன்- தம்பி? அழகிரிக்கு வழங்கப்படும் முக்கிய பதவி
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதி, முக அழகிரி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் இணைந்து அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதும், ஸ்டாலினை தொடர்பு கொண்ட அழகிரி தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பதவியேற்பு விழாவில், அழகிரியின் மகன் மற்றும் மகள் பங்கேற்றனர், இவர்களை உதயநிதி ஆரத்தழுவி வரவேற்ற காட்சிகள் வைரலாக பரவின.
இந்நிலையில் நேற்று மதுரையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர் ஸ்டாலின், அண்ணன் அழகிரியின் வீட்டுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல்வரோ, தன்னுடைய பணிகளை முடித்துவிட்டு திருச்சிக்கு புறப்பட்டார், இதனால் அழகிரியின் ஆதரவாளர்கள் கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.
மேலும் எப்போது அண்ணன்- தம்பிகள் ஒன்று சேர்வார்கள் எனவும் திமுக தொண்டர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றார்களாம், இந்நிலையில் வரும் ஜூன்3-ந் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் வருகிறது.
அன்றைய தினம் கருணாநிதி வீட்டில் இருந்து அழகிரி, முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி. என ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக கருணாநிதி நினைவிடம் செல்ல திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறதாம்.
இதனை தொடர்ந்து தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி அழகிரிக்கு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.