ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய போக்குவரத்து விதிகள் அமுல்., அபுதாபி, துபாய் பொலிஸார் எச்சரிக்கை
ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி மற்றும் துபாய் பொலிஸார் புதிய போக்குவரத்து விதிகளை கொண்டுவந்துள்ளனர்.
ஓடும் வாகனத்தின் Sunroof மற்றும் ஜன்னல் வழியாக தலையை வெளியே வைத்தால் 2000 திர்ஹம் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 1,70,300) அபராதமும், 23 Black Point-களும் விதிக்கப்படும் என அபுதாபி மற்றும் துபாய் பொலிஸ் படைகள் எச்சரித்துள்ளன.
மீறுபவர்களின் வாகனங்கள் 60 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும். வாகனத்தை விடுவிப்பதாக இருந்தால், 50 ஆயிரம் திர்ஹம் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 42,57,000) அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
"சன்ரூஃப்கள் வழியாக உட்கார்ந்து தலையை வெளியே தள்ளுவது மிகவும் ஆபத்தானது. எதிர்பாராதவிதமாக வாகனம் நின்றாலோ அல்லது மற்ற வாகனங்களில் மோதினாலோ பலத்த காயங்கள் ஏற்படும்.
போக்குவரத்து பாதுகாப்பை அதிகரிக்கவும், விபத்துகளை கப்படுத்தவும் காவல்துறையும் சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் Saif Muhair Al Mazrouei கூறினார்.
துபாயில் கடந்த ஆண்டு 1,183 விதிமீறல்கள், அபாயகரமான வாகனம் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு விதிமீறல்களுக்காக 707 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாலையில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Car Sunroof, Vehicle Window, Dubai, Abu Dhabi Police, UAE Traffic Rules