ஜெலென்ஸ்கியை அடுத்து ஸ்டார்மர், மேக்ரானை வம்பிழுக்கும் டொனால்டு ட்ரம்ப்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் எதுவும் செய்யவில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
துணிச்சலான தலைவர்
அடுத்த வாரம் இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்கவிருக்கும் நிலையிலேயே, தொடர்புடைய கருத்தை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கியின் தேவை இல்லை என்றும், அவ்வளவு முக்கியமானவராக ஜெலென்ஸ்கியை தாம் கருதவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனல் உக்ரைனுக்கான ட்ரம்பின் சிறப்பு தூதர் Keith Kellogg உக்ரைன் ஜனாதிபதியை துணிச்சலான தலைவர் என புகழ்ந்துள்ளார். சமீபத்திய நாட்களில் பல்வேறு உலகத் தலைவர்களுடன் ஜெலென்ஸ்கி தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளார், உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை உறுதி செய்வதில் அவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில் ஸ்டார்மர் தெரிவிக்கையில், சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அங்கு பிரித்தானிய இராணுவத்தை நிலைநிறுத்த தாம் தயாராகவும் விருப்பமாகவும் உள்ளதாக குறிப்பிட்டுருந்தார்.
ஐரோப்பிய தலைவர்கள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்தாலும், உக்ரைனில் நடக்கும் போர் குறித்து விவாதிக்க அவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திங்களன்று பாரிஸ் நகரில் அவசர கூட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
ஒரு நாடே சீரழிந்து விட்டது
2022ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததன் பின்னர் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யா மீது 20,000க்கும் மேற்பட்ட தடைகளை விதித்துள்ளன.
பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவி வழங்குவதற்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஜனவரி மாதம் பிரித்தானியாவின் ஸ்டார்மர் உக்ரைனுடன் 100 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்தார்.
இந்த நிலையிலேயே, அவரது சொந்த ஈடுபாடு இல்லாமல் ரஷ்யாவும் உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருக்க வாய்ப்பில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ஜெலென்ஸ்கியை மீண்டும் மோசமாக விமர்சித்துள்ள ட்ரம்ப், அந்த நபரால் ஒரு நாடே சீரழிந்து விட்டது என்றார். ஜெலென்ஸ்கியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தாலும், அவரது தொலைபேசி அழைப்பை தாம் நிராகரிப்பதில்லை என்றார்.
ரஷ்யா இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர கடுமையாக முயன்று வருவதாகவும், ஆனால் ஜெலென்ஸ்கியுடன் ஒப்பந்தம் செய்வது என்பது ரஷ்யாவால் முடியாமல் போயுள்ளது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |