உணவளிக்காமல் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள்... இன்னொரு தேவாலயத்தில் அதிர்ச்சி சம்பவம்
கென்யாவில் இன்னொரு பட்டினி வழிபாடு தொடர்பான வழக்கில் பொலிசார் 31 அப்பாவி மக்களை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலவீனமாகவும் பசியுடனும்
ஏறக்குறைய ஒரு வாரமாக பட்டினி கிடந்த அந்த குழு பலவீனமாகவும் பசியுடனும் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்களில் 14 பெரியவர்கள் மற்றும் இரண்டு வயது குழந்தை உட்பட 17 சிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
@reuters
தொடர்புடைய தேவாலயத்தில் இருந்து 62 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அந்த குழுவினருக்கு தலைவராக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
கிஹிங்கோ மாவட்டத்தில் அமைந்துள்ள அந்த கிராமத்தில் குடியிருப்பு ஒன்றிலே 31 பேர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு வாரமாக உணவளிக்கப்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.
Uasin Gishu பிராந்தியத்தில் Moi's Bridge பகுதியை சேர்ந்த 66 வயது பெண்மணி ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார்.
தமது மகள், செவிலியராக பணியாற்றி வருபவர், இதுவரை மருத்துவமனையில் செல்லவில்லை எனவும், Njoro பகுதிக்கு பயணப்பட்டு தேவாலய வழிபாடுகளில் ஈடுபடுகிறார் எனவும் அவரை மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
உணவளைக்கப்படாமல் பட்டினியில்
தமது மகள் அடைத்து வைக்கப்பட்டு, உணவளைக்கப்படாமல் பட்டினியில் உள்ளார் எனவும் அந்த தாயார் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட பொலிசார், அந்த செவிலியரின் மொபைல் தடத்தை அறிந்துகொண்டு தொடர்புடைய தேவாலயத்தை முற்றுகையிட்டனர்.
@reuters
பின்னர் அந்த பெண் போதகரை கைது செய்ததுடன், 31 அப்பாவி மக்களை மீட்டுள்ளனர்.
தென்கிழக்கு கென்யாவில் மற்றொரு பட்டினி வழிபாட்டில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு தேவாலயத்தில் இருந்து இந்த செய்தி வந்துள்ளது.